அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் தேர்ந்தெடுத்த பாடல்களை 34 தலைப்புகளில் நிரல்படுத்தி, உரை மொழிந்து விளக்கும் நுால். கவிதை நடையில் படிப்போருக்கு இன்பம் தரும். திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்; இந்த உரையைப் படிக்க படிக்க வாழ்க்கை மணக்கும். திருப்புகழ் சிறப்புப் பாயிரமும், வாரியார் சுவாமிகள் அருளிய அருணகிரிநாதர் வரலாறும் இடம்பெற்றுள்ளன.
திருப்புகழ் பாடல்களை முறையாக பாட நிரல்படுத்தப்பட்டுள்ளது. தினமும் திருப்புகழால் வழிபட 108 நாமாவளி படைத்தருளப்பட்டுள்ளது. ஆறுமுகப் பெருமான் கீர்த்தியையும், ஆன்மிக அறு சமய நேர்த்தியையும் சான்றுகளுடன் எடுத்துக் காட்டியுள்ளார்.
திருப்புகழின் மகா மந்திர பூஜை மகிமை விளக்கப்பட்டுள்ளது. தமிழின் சிறப்பு எழுத்தாகிய ‘ழகரம்’ ஐம்பத்தோரு முறை பயின்று வர, ஆறுமுக துதியாக அமைந்துள்ள பாடல் மணி மகுடமாக விளங்குகிறது. ஆன்மிக அன்பர்களை ஈர்க்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்