‘டாடா கன்சல்டன்சி’ என்ற டி.சி.எஸ்., வளர்ச்சியை தனி மனித வரலாற்றுடன் விவரிக்கும் மொழிபெயர்ப்பு நுால். டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்து பணி நிறைவு பெற்றவர், தன் வாழ்க்கையையும், நிறுவன வளர்ச்சியையும் இணைத்து எழுதியுள்ளார். நிறுவனத்தை வழிநடத்துபவரின் வாழ்வோடு, நிறுவன வளர்ச்சி பின்னிப் பிணைந்திருப்பதை காட்டுகிறது.
நிறுவன வெற்றி வரலாறு என்று படிக்கத் துவங்கினால், தனி மனிதர், பணியாற்றும் நிறுவனத்துடன் எப்படி எல்லாம் பிணைந்திருக்கிறார் என்பதை, நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது. இது, வியப்பை தருகிறது.
ஒரு நிறுவனம் நிதி வழிச் செயல்பாட்டையும், நிரல் வழிச் செயல்பாட்டையும், உலக நாடுகளில் பரப்பியதை நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது. இது, மென்பொருள் துறையில் பணியாற்றுவோரை மட்டும் அல்லாமல், முன்னேறத் துடிக்கும் அனைவரையும் கவரும் என்று நம்பலாம்.
–
முகிலை ராசபாண்டியன்