பத்து ஆசிரியர்களின் சிறுகதைகளை உரிய படத்துடன் வெளியிடப்பட்டுள்ள நுால். பத்து கதைகளும் 10 முகம் காட்டுகின்றன. கதைகளுக்கும் அப்பால் மாசறு பொன் என்னும் தலைப்பு அமைந்துள்ளது. இது சிலப்பதிகாரத்தை நினைவுகூர்கிறது. இந்த நுால் முகத்தில், ‘நன்றி’ என, சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள் பெயரைக் குறிப்பிட்டிருப்பது வித்தியாசமாக உள்ளது.
கருட சேவையை பார்க்கும் கோபால் வித்தியாசமான மனிதராக ‘மூங்கில்கள்’ என்னும் கதையில் வலம் வருகிறார். ‘பாதுகாப்பு’ என்னும் கதையில் ஓர் ஊமைக்காதல் பத்திரமாய் பாதுகாக்கப்பட்டதைத் தொடர்ந்து, காதலியின் மகளுக்கும் பாதுகாப்பாய் இருக்கும் அளவிற்கு வலிமையான அடையாளமாகக் காதல் காட்டப்பட்டுள்ளது.
பத்து கதைகளும் 10 வகையான அனுபவத்தை வழங்குகின்றன.
– முகிலை ராசபாண்டியன்