சந்திர குப்தரின் அரச குருவாக விளங்கிய சாணக்கியர் இயற்றிய நீதி சாஸ்திரம், சாணக்கிய நீதி என்ற தலைப்பில் தமிழில் தரப்பட்டுள்ளது. வேத, புராணங்களில் படித்த கருத்துக்கள் மட்டுமன்றி உலக வாழ்வை உற்று கவனித்து தர்மம், குடும்பம், பொருளாதாரம், தொழில், செல்வம், கல்வி, நட்பு எனப் பல்வேறு தலைப்புகளில் நற்கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது.
சாணக்கியர் எழுதிய ஸ்லோகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பும் உள்ளது. ஆங்காங்கே தேவையான விளக்கங்கள் எளிய நடையில் தரப்பட்டுள்ளன. அரிய கருத்துக்கள் பொன்மொழிகளாக உள்ளன.
சில கருத்துக்கள் இக்காலத்திற்கு பொருந்தாமல் காணப்பட்டாலும், சாணக்கியர் காலத்துக்கு ஏற்ப எழுதப்பட்டதாக கொள்ள வேண்டும் என்கிறார் நுாலாசிரியர். ஒரு குடும்பத்திற்காக ஒருவரும்; ஒரு கிராமத்திற்காக ஒரு குடும்பமும்; ஒரு நாட்டிற்காக ஒரு கிராமமும் தியாகம் செய்யலாம் என்பன போன்ற கருத்துக்கள் உள்ளன.
– புலவர் சு.மதியழகன்