கோகுலபதி கூர்ம நாதகவி என்ற தெலுங்கு கவிஞரின், ‘வேங்கடாசல விகார சதகமு’ என்ற நுாலின் சுருக்கமான மொழிபெயர்ப்பு. விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்ற பிறகு கோல்கண்டா, பீஜப்பூர் சுல்தான்கள் வேங்கடகிரியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிகழ்த்திய கொடுமைகளைக் கண்டு கொதித்து எழுந்த கவிஞர், கதறி அழுவதைத் தவிர வேறு வழியின்றி, வேங்கடவன் மீது கோபங்கொண்டு முறையிட்டு அரற்றுவதாக இயற்றப்பட்டுள்ளது.
கோவில் கதவுகளை உடைத்து உட்புகுந்த வர்கள் உருவச் சிலைகளை உடைத்தும், கூடியிருந்த ஆச்சாரியார்களைத் துன்புறுத்தியும், திருமார்பிலே அணிந்திருந்த பூணுாலைஅறுத்தும், வாளால் வெட்டியும், பெண்களை மானபங்கப்படுத்தியும் நிகழ்த்திய கொடுமைகளை பதிவு செய்துள்ளது. துருக்கர்களின் படையெடுப்பையும், நிகழ்த்திய கொடுமைகளையும் விளக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்