பல விதத்திலும் இது மாறுபட்ட படைப்பு. ஒரு ஆணும், பெண்ணும் பழகினாலே அது காதலில் தான் முடியும் என்ற பிற்போக்கான எண்ணத்தை இந்த கதை உடைத்தெறிந்து இருக்கிறது. அதுவும் ஊடகங்களில் காலம், நேரம் பார்க்காமல் ஒன்றாக பணி புரிய வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று.
இதனால் ஏற்படும் சந்தேகம், அதனால் உருவாகும் குழப்பம், பணி புரியும் இடத்தில் காணப்படும் போட்டி, பொறாமை; அதன் விளைவுகள், பெற்றோரின் திடீர் திருமண ஏற்பாடு இப்படியாக பல திருப்பங்களை உள்ளடக்கி இதை எழுதியுள்ளார் இந்திரா. ‘தினமலர்’ நாளிதழ் வாரமலரில் தொடர்கதையாக வெளியான இது, அவருடைய 120வது தொடர்.
–
இளங்கோவன்