பேச்சாற்றல் என்ற அற்புதக் கலை பற்றி எழுதப்பட்டுள்ள நுால். பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது. நம்பிக்கையோடு பயமின்றி, சபை நாகரிகம் அறிந்து பேச வேண்டும் எனக் குறிப்பிடுகிறது.
பேச்சாற்றலை வளர்க்க 64 செயல் திறன்களை பின்பற்ற அறிவுறுத்துகிறது. மொழி உச்சரிப்பு, ஏற்ற இறக்கத்துடன் பேசுதல், பேசுபவரின் மெய்ப்பாடு, அறிவார்ந்த சிந்தனையை வித்தியாசமாக வெளிப்படுத்தல், கால அளவு, தன்மை, கேட்பவரின் தகுதி, குட்டி கதைகளை வெளிப்படுத்துவதை வலியுறுத்துகிறது.
புள்ளி விபரங்களையும், இலக்கிய மேற்கோள்களையும் அடுக்குமொழி நடையில் வெளிப்படுத்தல்; உண்மை சம்பவங்களை விவரித்தல்; தலைப்பை ஒட்டியும் நோக்கத்தையும் புரிந்தும் செய்திகளை சுவைபட வெளிப்படுத்துதல் என பல தகவல்களை தருகிறது. பேச்சாற்றல் ஒரு கலை மட்டுமல்ல; அது அறிவியல் எனவும் குறிப்பிடுகிறது. பேச்சாற்றலை துாண்டி வளர்க்கப் பயன்படும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்