வாழ்க்கை பாதையில் சந்தித்த பெருமக்கள் பற்றி உயர்வான கருத்துகளை வெளிப்படுத்தும் நுால். சுய சரிதையின் ஒரு பகுதி போல் அமைந்துள்ளது. ‘தினமலர்’ நாளிதழ் ஆசிரியர் கி.ராமசுப்புவின் உதவும் இயல்பை, ‘கை கொடுக்கும் கை’ என்ற தலைப்பில் அனுபவ பூர்வமாக உணர்ந்து நெகிழ்வுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
இது போல் வாழ்வு பயணத்தில் சந்தித்த, 37 பேர் பற்றிய சித்திரங்களை பதிவு செய்துள்ளார். முதலில் நீதிபதி சந்துரு பற்றி உள்ளது. தொடர்ந்து பல துறைகளில் பிரபலங்களுடன் கொண்டு உள்ள தொடர்பு பற்றி குறிப்பிட்டுள்ளார். அன்றாடம் சந்திக்கும் சாதாரண மக்களிடம் கண்ட உயர்ந்த குண நலன்களையும் உயர்வாக பதிவு செய்துள்ளார்.
அனைத்தும் நீண்ட அனுபவத்தின் வெளிப்பாடாக மலர்ந்துள்ளது. பல நிகழ்வுகள் காட்சி மயமாக எழுதப்பட்டுள்ளன. வாழ்வில் இனிய செயல்களால் உயர்வு தந்தவர்களை நன்றியுடன் மேன்மைப்படுத்தி படைக்கப்பட்டுள்ள நுால்.
–
ராம்