நாகஸ்வரம் – நாட்டியம் இடையேயான போட்டியை மைய கருவாக்கி எழுதப்பட்டுள்ள நாவல் நுால். மூன்று பெரும் தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாவல், ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த காலத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. பின், சினிமாவாக தயாரிக்கப்பட்டு தமிழக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கலைகளுக்கு இடையே வேறுபாடு கூடாது என்பதை வலியுறுத்தியதுடன், தஞ்சை மாவட்டத்தின் அன்றைய நிலையை எடுத்துக்காட்டியது.
நாகஸ்வர கலைஞன் மற்றும் நாட்டிய கலைஞரிடையே ஏற்பட்ட காதல், பிரச்னை, இடையூறை மையமாக கொண்டு எழுதப்பட்டது. நாகஸ்வரம் – நாட்டியம் இடையே ஏற்பட்ட போட்டி, கலைகளுக்கு உரிய தனித்துவத்தை வெளிப்படுத்தியது.
இதழில் தொடராக வெளியான போது இருந்த ஓவியங்கள் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இது தனித்துவமாக உள்ளது. தெளிந்த நடையில் சுவாரசியம் தரும் நாவல்.
–
மதி