இலங்கை தமிழ் வட்டார வழக்கில் எழுதப்பட்டுள்ள நாவல். புலம் பெயர்ந்து இங்கிலாந்தில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த சைந்தவியின் குடும்ப வாழ்வை மையமாக கொண்டு படைக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் பழகிய ஒரு பெண்ணை காணும் கணவனால் ஏற்படும் பிரச்னைகளை முன்நிறுத்தி புனையப்பட்டுள்ளது.
இலங்கை உள்நாட்டு போர் பாதிப்புகளையும், அபயம் தேடி வந்த இடத்தில் அடையாளம் மறைத்து வாழும் அவஸ்தையை மட்டுமின்றி தமிழர்களின் தன்னம்பிக்கை குறித்தும் எடுத்துரைக்கிறது.