பன்முகத் தன்மையுள்ள நாட்டில் ஒரே கல்வி சாத்தியமற்றது என வலியுறுத்தும் நுால்.
கல்வியால் உருவாகும் அறிவு, அதை கையாளும் திறனில் மாற்றம் தேவைப்படுகிறது. துறை சார்ந்த அடிப்படையை கற்பதற்கும், தற்கால சூழலுடன் இணைத்து சிந்திப்பதற்கும் வரலாறை உணர்வது அவசியம்.
சூழ்நிலை மாற்றம் பெறும் அறிவை வாழ்க்கையில் கையாளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். கோத்தாரி கமிஷன் கல்விமுறை, கஸ்துாரி ரங்கன் கல்விமுறை ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. பாலின சமத்துவம், சுகாதாரம், மனித உரிமை போன்ற குறியீடுகள் இடம் பெற்றுள்ளன.
கல்வி முறை பற்றி தெளிவை ஏற்படுத்தும் நுால்.
– புலவர் சு.மதியழகன்