நகரின் மத்தியில் நின்று சிறுவர்களுக்கு பயாஸ்கோப்பில் படம் ஓட்டி பிழைப்பு நடத்தும் மூதாட்டியுடன் விரியும் நாவல்.
சிறையில் சகாக்களை விடுவிக்க வலியுறுத்தி, தொழிலதிபர் மகளை தீவிரவாதிகள் கடத்திச் செல்கின்றனர். இதை எதிர்கொள்ள ராணுவத் தளத்தில் அதிரடிப்படை தயாராகிறது. அந்த மீட்புப் படையில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் உள்ளார். பணயக் கைதியை மீட்கும் சண்டையில் குண்டடிப்பட்டு பலத்த காயத்தோடு தப்புகிறார்.
இதனிடையே, போதை கடத்தல் கும்பலை அடக்கும் பணியில் தீவிரம் காட்டும் ஐ.பி.எஸ்., அதிகாரி, உயரதிகாரிகளின் அழுத்தத்திற்கு ஆட்படுகிறார். அதையறிந்து தற்கொலைப் படையாக மாறும் தமிழர் கும்பலை அழித்து, மாய்த்துக் கொள்கிறார். நாட்டுப்பற்றையும், தியாகத்தையும் பறைசாற்றும் நாவல்.
– சையத் அலி