சங்க இலக்கியப் பாடல்களை தேர்ந்தெடுத்து, அதன் பொருளை நவீன காலத்திற்கு பொருந்தும் வகையில் கதைக் கருவாக்கி புனையப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
திடீரென வறுமை குடி புகுந்த போதிலும், புகுந்த வீட்டை விட்டுக் கொடுக்காமல் வாழும் சுபா, நீண்டகாலம் காத்திருந்து விரும்பியவனை மதிநுட்பத்தால் அடையும் ரதி, அமெரிக்க வாழ் தம்பதியின் விருந்தோம்பல், பிரிந்த காதலன் குறித்து சீஹல் என்ற பறவையிடம் சொல்லி தேற்றும் ராதா பாத்திரங்களால் அழகியலும், மாண்பும் மேலோங்கி நிற்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை மாந்தர்கள், சூழல் எல்லாம், இப்போதும் எப்படிப் பொருந்திப் போகிறது என நுட்பமாக உணர்வை கடத்தியுள்ள நுால்.
– மேதகன்