வரலாறு, ஆன்மிகம், அறிவியல் கண்டுபிடிப்புகள், தத்துவம் பற்றிய கட்டுரை, கதை, கவிதைகள் உடைய நுால். இந்திய பாரம்பரியத்தைக் காட்டும் நாணயங்கள், சாசனங்கள், கல்வெட்டுகள், நினைவுச் சின்னங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன.
அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் குறித்த கட்டுரை ரசிக்கும் ரகம். கவனிக்க வேண்டிய திரைப்படங்கள் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது. மதிப்புரைகளும் பதிவாகியுள்ளன. பாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் குறித்த குறும்பட கருத்துகள் யோசிக்க வைக்கின்றன.
பாலை நிலத்திற்கு இலக்கணம் வகுக்காததால், ‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல் பழிந்து கடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவங் கொள்ளும்’ என இயல்பு விவரிக்கப்பட்டுள்ளது.
– முகில் குமரன்