பாலியல் ரீதியான பாகுபாட்டை அகற்றும் வழிமுறையை உருவாக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். வகுப்பறையில் நடக்கும் எளிய உரையாடல் போல் முரண்பாடுள்ள நிலையை தெளிவாக விளக்குகிறது.
மாணவ – மாணவியரிடம் சமத்துவத்தை போதிக்கும் வகையில் உண்மை சார்ந்த கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. வகுப்பறையில் மாணவ – மாணவியரை மிகவும் மென்மையாக அணுகும் முறையில் உள்ளது. சமூகத்தில் நிலவும் வன்முறை சிந்தனையை போக்கும் வகையில் உறுத்தலற்ற அறிவுறுத்தலாக மலர்ந்துள்ளது.
சமூகத்தில் பழக்கப்பட்டு நிலைத்துவிட்ட சில இயல்புகளின் கொடூர முகங்களை தோலுரித்து காட்டுகிறது. அது போன்ற பழக்க வழக்கங்களை புறக்கணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.ஆண், பெண் சமத்துவத்துக்கு அடித்தளம் போடும் நுால்.
– ஒளி