தகவல்களின் களஞ்சியமாக உள்ள நுால். பல பொருள்களில் வியப்பூட்டும் வகையிலான பொருள்கள் பற்றி உள்ளது. பொதுத்தகவல், ஆன்மிகம், உடல் தத்துவங்கள், இரண்டு வரிகளில் ரகசியம், தெரிந்து கொள்வோம் என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது.
குடந்தையில், 40,000 நுால்களுடன் இயங்கும் நுாலகம் குறித்த தகவல் பிரமிப்பு தருகிறது. இதற்கு நன்கொடை வழங்கியோர் பட்டியலும் இடம் பெற்றுள்ளது. உடல் இயக்கத்தை மாற்றி உபாதைகளை தீர்க்கும் ஆலோசனைகளும் தரப்பட்டுள்ளன. உடலின் வினோத செயல்பாடு, உறுப்புகள் பற்றிய செய்திகளை உடையது.
மனதை இலகுவாக்கும் பொன்மொழிகள் போல பல உள்ளன. நம்பிக்கையுடன் வாழ்வதற்கு ஏற்ற வகையில் வியப்பூட்டும் தகவல்களை தேடித் தொகுத்து தரும் நுால்.
– ஒளி