வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் புனையப்பட்டுள்ள நாவல். ராஜஸ்தான் பகுதியில் இருந்த மேவார் நாடு சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் நலன் காக்க போராடுபவனாக கதாநாயகனை சித்தரித்துள்ளது. அவன், மனைவியின் அன்பை பெற கடும் முயற்சி எடுக்கிறான். இந்த செயல்களில் வெற்றி பெறுவதற்கான விடையை தேடுகிறது. இதுவே, கனவில் தொலைந்தவனாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
படைப்பு முழுக்க நிதானம் மிளிர்கிறது. மேவார் நாட்டின் பண்பாடு, அங்கு நிலவிய சடங்குகள், நடை உடை பாவனைகள், உணவு வகைகள் தொடர்பான செய்திகள் மிக நுட்பமாக பதிவாகியுள்ளன. மொழிபெயர்ப்பு போல் இல்லாமல், மிக இயல்பாக தமிழ் நடையில் உள்ளதால் வாசிக்க சுவாரசியம் தரும் நுால்.
– மதி