எளிமையாக பாடங்களை புரிந்து கற்பதற்கு திட்டமிட்டு பயிற்சியை தரும் நுால். அட்டவணைகள் வரைந்து முறையாக வழிகாட்டும் வகையில் உள்ளது.
இந்த புத்தகம், 20 கட்டுரைகளை கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் எளிய முறையில் பாடங்களை உள்வாங்கும் வழிமுறைகளை உடையது. நேரில் பேசுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆழமாக படித்து, உள்வாங்கி புரிந்து கொள்வதற்கு ஏற்ற செயல்முறைகளை வகுத்து தருகிறது.
அழியா சொத்து, ஜாலியாக படிக்கலாம், மனசோடு விளையாடலாம் போன்ற தலைப்புகள், உளவியல் சார்ந்த நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. புத்தகத்தின் ஒவ்வொரு வரியும், அனுபவங்களின் சாரத்தில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவ – மாணவியருக்கு உதவும் வகையிலான நுால்.
– மதி