சென்னையின் ஒரு பகுதியாக சிறப்புடன் விளங்கும் நங்கநல்லுார் வளர்ச்சியை எடுத்துரைக்கும் தொகுப்பு நுால். அனுபவங்களின் மலர்ச்சியாக உள்ளது.
தனித்தன்மையுள்ள, 50 கட்டுரைகளில் தரப்பட்டுள்ளது. ஒரு கிராமம், நகரமாக உருமாறியதை படம் பிடிக்கிறது.
நடுத்தர வருவாய் பிரிவினர் வசதிக்காக, 160 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி நங்கநல்லுார் கூட்டுறவு கட்டட சங்கம் உருவானதில் துவங்குகிறது. முதலில் கட்டப்பட்ட வீடு, அப்போதிருந்த தோற்றம், செயல்பாடுகள் எல்லாம் அனுபவக் கண்களால் வெளிப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் குடியேறியவர்கள் நேரடியாக வளர்ச்சியில் பங்கேற்றதை சுவாரசியமாக விளக்குகிறது. உள்ளூர் வரலாற்றை உரிய ஆதாரங்களுடன் பதிவு செய்யும் நுால்.
– மலர்