நண்பர்களின் வாழ்க்கை போராட்டத்தை கூறும் நாவல். உயர்ந்த கொள்கையுடன் ஏழையாக வாழும் ஒருவன், செல்வந்தர் மகனாக பிறந்த மற்றொருவன் வழியாக, சமூக ஏற்றத்தாழ்வுகளை பேசுகிறது.
சூழ்ச்சியால் இருவருக்கும் மனகசப்பு ஏற்படுவதுடன் சந்தேகம் வரை செல்கிறது. இதனால், லட்சியத்துடன் பயணிப்பதில் கவனம் செலுத்த முடியாமை, தடங்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் தெரிந்து வாழ்க்கையை அர்த்தம் கொண்டதாக அமைப்பதை பேசுகிறது. மூன்று பாகங்களை கொண்டது. உயிர்ப்புடன் படைக்கப்பட்டுள்ள நுால்.
– டி.எஸ்.ராயன்