ஒவ்வொரு நாளும் ஒன்று என, 365 கதைகளை தந்துள்ள தொகுப்பு நுால். பிரான்ஸ், ஆப்ரிக்கா, சீன நாட்டு படைப்புகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
சிறுவர்களுக்கு நல்லொழுக்கம் கற்பித்து அறவுரை வழங்கும் நீதிக் கதைகள் நிறைந்துள்ளன. பெரியவர்கள் படிப்பதற்கு, பேய்கள் மனிதர்களுக்கு அஞ்சுவது ஏன் போன்ற தத்துவ கதைகள் நகைச்சுவை இழையோட இடம் பெற்றுள்ளன.
ஆமையும் குரங்கும், குரங்கும் சிங்கமும், சிங்கத்தின் இறுதிக்காலம், சிறந்த குதிரை, புலியும் நண்டும், பதின்மூன்று ஈக்கள் போன்ற கதைகள் நிரம்ப உள்ளன. இயேசுநாதர் பற்றிய கதைகள், இஸ்லாமிய கதைகளில் ஆன்மிகம் கூறப்பட்டுள்ளது. பொழுதுபோக்க ஏற்ற சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– புலவர் சு.மதியழகன்