ஓட்டுரிமை, பசிப்பிணி, உழவர் என வாசிப்போர் மனதில் நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். இளம்பெண்களின் உடை நாகரிகத்தில் தவறைச் சுட்டிக்காட்டியுள்ளது.
அன்னை மீனாட்சியின் தாயுள்ளம் பற்றி, ‘கேட்பது கொடுப்பவள் தாயல்லள்; உனக்கு ஏற்றது கொடுப்பவள் தாயன்றோ’ என்று ஆன்மிக உண்மையை விளக்குகிறார்.
‘மருந்தை எடுத்துக் கொடுப்பது ஒன்றே மருத்துவனென்றன் வேலையடா; பொருந்திச் சரியாய் போவது எல்லாம் படைத்தாளே அவள் லீலையடா’ என்று தொழிலை முன்வைத்து இறை சக்தியின் மகத்துவத்தை, பணிவின் அவசியத்தை உணர்த்துகிறார். காதல் என்ற உணர்வை உன்னதமாய் போற்றி மகிழ்கிறது.
-– தி.க.நேத்ரா