மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை பகுதியை பூகோள ரீதியாக அலசி அங்கு வாழும் மக்கள் வரலாற்றை பதிவு செய்துள்ள நுால். பசுமை மிக்க சோலைக்காடு, உற்பத்தி சார்ந்த இடமாக உருவாகியுள்ளதை விளக்கமாக சொல்கிறது.
மாஞ்சோலை பகுதியில் பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள மாறுதல்களை தெரிவிக்கிறது. அங்கு பணிபுரியும் மக்களின் வாழ்க்கை சூழல் பற்றிய விபரங்கள், இயற்கையின் செயல்பாடுகள் குறித்த விபரங்கள் உள்ளன.
பூகோள ரீதியாக அமைவிடம், மலையை கையகப்படுத்திய வரலாறு, மக்களின் பண்பாடு, கலாசாரம் பற்றி எல்லாம் பேசுகிறது. மாஞ்சோலை என்ற இடத்தின் அதிகாரம், திருவிதாங்கூர் மன்னரிடம் இருந்து மாறி மாறி அமைந்துள்ள விபரங்களை பற்றி கூறுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு பகுதி மாற்றத்தை குறிப்பிடும் நுால்.
– மதி