வயலை உழவும், வண்டி இழுக்கவும் எருதுகளை இணைக்க உதவும் நுகத்தடி போல் மனதை பண்படுத்தும் மலர்ந்துள்ள கவிதை தொகுப்பு நுால்.
தாய் மகத்துவத்தை, ‘அலங்காரம் இல்லாத எத்தனையோ கிராம சாமிகளில் நீயும் ஒருத்தி’ என குறிப்பிடுகிறது. புனிதத்தை, ‘மெல்ல நடக்கிறாய் எங்கே நான் விழித்துக் கொள்வேனோ என்று’ என குறிப்பிடுகிறது.
வேதனையை, ‘உழுதுண்ட உழவனுக்கு உட்கார காணி நிலமும் இல்லை’ என அறைகூவி பதிவிடப்பட்டுள்ளது. ‘நோட்டுகளை விட சில்லரை வலுவானது என்பதை கடக்கும் வெள்ளரிக் கூடையை கைத்தாங்கலாய் உயர்த்த உணர்ந்தேன்’ என நெகிழ வைக்கின்றன. அவலங்களை பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்