வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதை போல நிலவும் பிரச்னைகளை கருவாகக் கொண்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால். வியாபாரியின் துாண்டிலில் சிக்காமல் தப்பித்தவர் மருமகன் துாண்டிலில் சிக்கிய பரிதாபம்; பாசத்தை காட்டிய அண்டை வீட்டு பெரியவரிடம் பெற்ற மகளை சந்தேகித்த தந்தை; மெடல் பெறச் சென்று ஏமாந்த தந்தைக்கு ஆறுதல் தந்த சிறுவன் என கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன.
எதுவும் தெரியாத அப்பாவி மனைவிக்கு தைரியம்அளித்த அதிர்ச்சி சம்பவம்; மருமகளைத் தேடி அலைந்த தாய்; பார்வைகள் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதை மனைவிக்கு உணர்த்திய கணவன் என்று குணாதிசயங்களை கூறியுள்ள நுால்.
-– இளங்கோவன்