பாரம்பரியம் மிக்க தெனாலிராமன் கதைகளின் பொக்கிஷமாக மலர்ந்துள்ள நுால். தமிழில் இதுவரை வெளிவராதவற்றை உள்ளடக்கியது. தெனாலி, விஜயநகரத்தில் தனிப்பட்ட ஆய்வு நடத்தி தனித்துவம் சேர்க்கிறது.
ஒவ்வொன்றும் மனம் நிறைய சிரிப்பு தருகிறது. கதை நடை, இளம் மற்றும் வயதான வாசகர்களை கவரும். புத்திசாலித்தனத்தை ஊக்குவிக்கிறது. பழைய பணம் பழம் தானே, மகா காளியின் தரிசனம், அரண்மனையில் விகடகவி, தலைக்கு வந்த ஆபத்து, அபலையின் கண்ணீர், இப்படி ஒரு பூனையா, நரபலி போல் 46 வித்தியாசமான கதைகள் உள்ளன.
புத்திசாலித்தனம், நகைச்சுவை இவற்றில் வெளிப்படுகிறது. அரண்மனை ஊழியர்களுக்கு இடையேயான எளிய பிணைப்பை விவரிக்கிறது. அறிவைத் தேடுபவர்களுக்கும், நகைச்சுவை ஆர்வலர்களுக்கும் விருந்தாக அமையும் நுால்.
– வி.விஷ்வா