வாஸ்து என்பது ஒரு கலை. அதை, மனையடி சாஸ்திரம் என்று அக்குவேராக ஆணிவேராக எழுதியுள்ள நுால். இதன் மூலம் பற்றி ஆராய்ந்து, தகுந்த தகவல்களை முன்வைக்கிறது.
பூமி பூஜை நடத்தும்போது உடைக்கும் தேங்காய், குடுமி பக்கம் பெரிதாக, அடிப்பக்கம் சிறியதாக உடைந்திருந்தால் செழிப்பு என்கிறது. தேங்காய் உடையும் விதங்களையும், அதன் பலன்களையும் சொல்கிறது.
கோவில் மற்றும் கோவில் தொடர்புடைய கோபுரம் போன்றவற்றில் அணி விரல், முழம் என்ற அளவை பயன்பட்டுள்ளதை சொல்கிறது; அதற்கான விளக்கமும் உள்ளது. கோவில் கதவுக்கு நாவல் மரம் தான் நல்லது என்கிறது. மனைக்கதவுக்கு எந்த மரங்கள் ஏற்றவை என்பதை பட்டியலிடுகிறது. வீடு கட்ட துவங்குவோர் கையில் இருக்க வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச்சாத்தன்