தமிழ்மொழியின் தொன்மையை பறைசாற்றும் ஐந்திணை ஒழுக்கங்கள், முச்சங்கங்கள் பற்றி விளக்கிக் கூறியுள்ள நுால்.
சமயப் பாடல்கள், இசைத்தமிழ், இசைப்பாடல்களின் பரிணாம வளர்ச்சி, நாடகத்தமிழ் நுால்கள், மேடை நாடகங்கள், திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளும் உள்ளன.
இறைவன், இயற்கை, படைப்புகள், கோள்கள் போன்றவற்றை சமயத் தத்துவங்களோடு பொருத்திக் காட்டுகிறது.
சிவலிங்க வரலாறும், வழிபாட்டு முறைகளும் தரப்பட்டுள்ளன. அருவுருவ வழிபாடு, பண்டைத்தமிழர் வழிபாடு போன்றவற்றுடன் மேலை நாட்டவர் கருத்துக்களும் வழங்கப்பட்டுள்ளன.
பண்டைக்காலம் தொட்டு இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாற்றுத் தகவல்களை நிரல்படத் தொடுத்து தரும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு