வீட்டுக்கு வீடு வாசற்படி என பிரச்னைகளை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால்.
ஒரு வியாபாரியின் துாண்டிலில் சிக்காமல் தப்பித்தவர் மருமகன் துாண்டிலில் சிக்கிய பரிதாபம்; பாசத்தை அண்டை வீட்டுப் பெரியவரிடம் பெற்ற மகளைச் சந்தேகித்த தந்தை; மெடல் பெறச் சென்று ஏமாந்த தந்தைக்கு ஆறுதல் கொடுத்த சிறுவன்; எதுவும் தெரியாத அப்பாவி மனைவிக்கு தைரியம் அளித்த அதிர்ச்சி சம்பவம் என அமைந்துள்ளது.
பாலிசியால் நம்பிக்கை ஏற்படுத்தும் இன்சூரன்ஸ் ஏஜன்ட் தனக்கு செய்துகொள்ளாத துயரம்; பார்வைகள் பலவிதம் உள்ளதை மனைவிக்கு உணர்த்திய கணவன் என சுவைபடக் கூறப்பட்டுள்ளது.
– இளங்கோவன்