தைராய்டு சுரப்பியின் முக்கியத்துவத்தையும், செயலிழப்பை சீர்படுத்தும் ஆலோசனைகளையும் தரும் தகவல் நுால். செயல்பாடுகள், அறிகுறிகள் மற்றும் உணவு பரிந்துரை குறிப்புகள் உள்ளன.
மனித உடலில் தைராய்டு சுரப்பியின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. நோய் அறிகுறிகளை சரியாக கண்டறிந்து, மருத்துவரை அணுகுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
பெண்களில் தைராய்டு கோளாறு அதிகமாக உள்ளதை குறிப்பிடுகிறது. ஹார்மோன் செயல்பாட்டை துாண்டும் சோயா, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டியது பற்றி விவாதிக்கிறது. செயல்பாட்டை ஊக்குவிக்கும் பழம், காய்கறிகள், தானிய உணவுகளை பரிந்துரைக்கிறது. நோயின்றி வாழ விரும்புவோருக்கு பயனுள்ள ஆதார நுால்.
– வி.விஷ்வா