தமிழ் மொழியின் அச்சு மற்றும் பதிப்பு வரலாற்றை சுருக்கமாக தரும் நுால். அச்சகம், பதிப்பகம், பதிப்பாளர் விபரங்களும் தரப்பட்டுள்ளன.
தமிழில் அச்சு எழுத்து வரலாற்றை மிகத் துல்லியமாக பதிவு செய்துள்ளது. முதலில் அச்சு எழுத்து தோற்றத்தின் தொல்லியல் ஆதார படங்கள் முறையாக தரப்பட்டுள்ளன. பழங்கால மனிதன் குகையில் எழுதிய படங்களும் உள்ளன. தொடர்ந்து தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட மாற்றங்களை படிப்படியாக பதிவு செய்துள்ளது.
தமிழில் அச்சு முறை உருவாக உழைத்த அறிஞர்களையும் அறிமுகம் செய்கிறது. பழமையான தமிழ் மொழியின் அச்சு எழுத்து சிறப்புகளை கூறுகிறது. தரப்பட்டுள்ள தகவல்களுக்கு உரிய ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன. தமிழின் அச்சுப் பண்பாட்டை சிறப்பாக வெளிப்படுத்தும் சுருக்கமான நுால்.
– மதி