தீமையுடன் நடக்கும் போரில், அன்பு தான் வெற்றியை நிலைநாட்டும் என விளக்கும் கதை நுால். மொத்தக் கதையும் முதியோர் இல்லத்தில் நடக்கிறது. நாயகன் சேது, நாயகி ஸ்வேதா செதுக்கப்பட்ட பாத்திரங்கள்.
கதையில் வரும் பாத்திரங்களின் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. உலகில் அன்பு தான் நிஜம்; மற்றதெல்லாம் மாயை என்று முழங்குகிறது. முதியோர் இல்லங்களை பற்றிய பார்வையை எளிய வார்த்தைகளில் தந்தது அருமை.
முதியோர் இல்லம் ஆதரவற்றோருக்கான அனாதை இல்லம் அல்ல; இளமையில் ஓடிக் களைத்த நதிகள், ஓய்வுக் காலத்தில் அன்பைப் பரிமாற சங்கமிக்கும் புனிதமான கடல் என வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
–- நேத்ரா