ஷேக்ஸ்பியரின் நகைச்சுவை நாடகங்களை எளிமையாக அறிமுகம் செய்யும் நுால். நாடகங்களை முழுமையாக ஆராய்ந்து அதன் கூறுகளை விவரித்து காட்டுகிறது.
ஒவ்வொரு கட்டுரையும் குறிப்பிட்ட நாடகத்தின் பின்னணியை தெரிவிப்பதோடு, சுருக்கமாக அறிமுகம் செய்து அலசுகிறது. கூடவே மூல வடிவத்தை வாசிக்கத் துாண்டவும் செய்கிறது. ஷேக்ஸ்பியரின் கதை சொல்லும் உத்தியை குறிப்பிட்டுக் காட்டுவதுடன், அவர் கொண்டாடப்படுவதற்கான காரணத்தை புரிந்து கொள்ள செய்கிறது.
எழுதப்பட்டு, 400 ஆண்டுகள் கடந்த பின்னும், இன்றும் மேடை ஏற்றப்பட்டு வரும் செய்தி வியப்பு ஏற்படுத்துகிறது. ஆய்வுக்கு உட்படுவதை விவரிக்கிறது. ஷேக்ஸ்பியரை விரும்புவோர் தவறவிடக்கூடாத நுால்.
– ஊஞ்சல் பிரபு