‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்பதைப் போல நிலவும் பல்வேறு பிரச்னைகளைக் கருவாகக் கொண்டு அமைந்த கதைகளின் தொகுப்பு நுால். வியாபாரியின் துாண்டிலில் சிக்காமல் தப்பித்த ஒருவர் மருமகன் துாண்டிலில் சிக்கிய பரிதாபம்; தந்தையிடம் கிடைக்காத பாசத்தை அண்டை வீட்டுப் பெரியவரிடம் பெற்ற மகளை சந்தேகித்த தந்தை போன்ற கருத்துகளை உடையது.
மெடல் பெறச் சென்று ஏமாந்த தந்தைக்கு ஆறுதல்கொடுத்த சிறுவன்; எதுவும் தெரியாத அப்பாவி மனைவிக்கு தைரியம் அளித்த அதிர்ச்சி சம்பவம்; மற்றவர்களுக்கு பாலிசியால் நம்பிக்கை ஏற்படுத்தும் இன்சூரன்ஸ் ஏஜன்டின் துயரம் என உருக்கமாக உள்ளது.
– இளங்கோவன்