மனித உணர்வுகளை சொல்லும் கதை. அப்பா – மகன் உறவு வெகு யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. இன்று மட்டுமல்ல... எந்த தலைமுறையாக இருந்தாலும் தந்தை – மகன் பிரச்னைக்கு தீர்வு கிடையாது என விவரிப்பது சுவையான உணர்வு. வாயும் இதயமும் எல்லோருக்கும் எல்லா நேரமும் ஒன்றாக இருக்காது என்பதற்கு தந்தை – மகன் உரையாடல், ஒரு சோறு பதமாக சொல்லலாம்.
மெத்த படித்த சீனியர் சிட்டிசன்களின் வடிகால் வங்கி என்பது ஓங்கி உச்சந்தலையில் அறைவது போல சொல்லப்பட்டிருக்கிறது. சினிமா காதலாக இல்லாமல், நிஜக்காதலைப் போல மவுனத்தில் நிரம்பி வார்த்தைகளுக்கு திரையிட்டு வாழ்ந்து காட்டியிருக்கிறது. அனைவருமே படிக்க வேண்டிய குடும்பக் கதையாக மலர்ந்துள்ளது.
– எம்.எம்.ஜெ.,