மதுரை மீனாட்சி கோவிலில் ஒயிலாக நடந்து எழிலாக வளைய வந்து ஆட்கொண்ட அந்த பேரழகு, நாவலில் நடை பயிலாமல் சக்கர நாற்காலியில் புன்னகையுடன் எதிர் கொள்கிறது. ஐயோ இந்த தேவதைக்கா இந்த நிலை என்று மனம் கதறும். அறுவை சிகிச்சைக்கு பின், இறைவன் ஆயுளை தந்தானே என்று ஆறுதலும் சொல்லிக் கொள்ளும்.
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி... என்று இறைவனை நினைத்து அன்பு கொண்ட மனமும் கண்ணீர் மல்கும். இதற்கென்று காதல், காமச்சாயம் தேவையில்லை. அப்படி பூசி கொச்சைப்படுத்தவும் முடியாது. எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட தேவதையும், அறிவால் ஈர்க்கப்பட்ட ஆசிரியரும் சந்திப்பது அழகு. அவர்கள் பகிரும் அன்புக் கதைகளை நாவலில் தெரிந்து கொள்ளலாம்.
– எம்.எம்.ஜெ.,