எல்லா உயிர்களும் சமம் என்ற வள்ளலாரின் வாழ்க்கை நெறியை விவரிக்கும் நுால். உயிரினங்களிடம் அன்பை கடைப்பிடித்ததை படம் பிடித்துக் காட்டுகிறது. வள்ளலார் காலச் சமூகம், ம.பொ.சி., பார்வையில் வள்ளலார் சமய நெறி, மெய்யியல் நெறி என்ற தலைப்புகளில் கருத்துகளை முன்வைக்கிறது. மதங்களில் சமத்துவம், மனிதர்களில் சகோதரத்துவம், உயிரினங்களிடம் நேயம் என நெறியைக் கட்டி எழுப்பியது பற்றிய விபரங்களைத் தெரிவிக்கிறது.
அன்பு வழியில் ஆண்டவனை அடையவும், சமய நெறியை அறிமுகப்படுத்தவும் வள்ளலார் மேற்கொண்ட வாழ்வு முறையை போதிக்கிறது. அன்பு வழியை சித்தாந்தமாக்கிய வள்ளலார் பாதையின் மகத்துவம் விவரிக்கப்பட்டிருக்கிறது. வள்ளலார் பற்றி உயர்ந்த பார்வையை தரும் நுால்.
– ஊஞ்சல் பிரபு