காமராஜரின் வாழ்க்கை சரித்திர நுால்.
விருதுப்பட்டி, விருதுநகர் ஆனது போல, காமாட்சி, காமராஜரானதிலிருந்து அமரரானது வரை தெள்ளிய நீரோடையாக சொல்லப்பட்டுள்ளது. சிறு வயதிலே எழுந்திருந்த விடுதலை வேட்கையும், காங்கிரஸ் மீது ஏற்பட்ட ஈர்ப்பையும் விவரிக்கிறது. நீதிக்கட்சியின் துவக்கம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. மதம் பிடித்த யானையை சிறு வயதில் காமராஜர் அடக்கிய விந்தை சம்பவம் உள்ளது.
காரைக்குடியில் காந்திஜி மேலாடை துறந்த நிகழ்ச்சி விவரிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக காமராஜர் ஆற்றிய பணி விபரங்கள் உள்ளன. அணைக்கட்டுகள் உருவாக்கி விவசாயம் பெருக வழிவகை செய்தது, மின் உற்பத்தி திட்டங்கள் உருவாக்கியது பற்றியும் விவரிக்கும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்