மகாகவி பாரதியின் சுதேசி பாடல்களை அறியத்தரும் அரிய பொக்கிஷமாக மலர்ந்துள்ள நுால்.
பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய, வந்தே மாதரம் பாடலை எளிய முறையில் பாடியிருக்கிறார் பாரதி.
அந்த மொழிபெயர்ப்புடன் பதவுரை பொழிப்புரையும் மனதில் பதியும் வண்ணம் அருமையாக தொகுக்கப்பட்டுள்ளது. மகாகவியின் கொள்ளுப் பேரன், கொள்ளு பாட்டன் புகழ் பாடியுள்ளதும் தரப்பட்டுள்ளது.
சிந்து இசை தொனிக்க, ‘யாகத்திலே தவ வேகத்திலே தனி யோகத்திலே பல போகத்திலே’ என்பதில் மொழியின் சிறப்பை எடுத்துரைக்கிறது. பாரதியின் தீர்க்கதரிசனங்கள் பலித்து வருவதை அறியத் தருகிறது. சுதேசி என்ற அஸ்திரத்தை, அஸ்திவாரமாக்க பெருமைப்படுத்தியதை எடுத்துரைக்கும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்