தொழிலாளியும் முதலாளி ஆகலாம் என வழிகாட்டும் நுால். பணத்தை பெறும் மூன்று படி நிலைகள் கூறப்பட்டுள்ளன.
தொழில் எப்படி இருக்க வேண்டும்; அதை எப்படி தேர்ந்தெடுத்து முதலாளி ஆகலாம் என்பதை விளக்கி உள்ளது. குறிப்பாக, தொழில் துவங்கும் போது, பிறந்த குழந்தையைப் போன்று கவனமாக பாதுகாக்க வேண்டும் என்ற விளக்கம் புதுமை. ஆராய்ந்து, கவனமுடன் துவங்குவதற்கு தக்க வழிகாட்டப்பட்டுள்ளது.
துவங்கிய பின் எவ்வாறு படிப்படியாக மேம்படுத்த வேண்டும் என்றும் விளக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு டீ கடையை நடத்தும் வழிமுறை கவனிக்க வைக்கிறது. தொழிலை நன்கு அறிந்து நிபுணத்துவம் பெற வேண்டுமென கூறுகிறது. தொழில் தொடர்பான கேள்விகளுக்கு தெளிவாக விடையளிக்கும் நுால்.
– முகில்குமரன்