கனடா பயண அனுபவங்களை விவரிக்கும் நுால். அந்த நாடு குறித்து முழுமையான சித்திரத்தை முன்வைக்கிறது. கலாசாரம், பண்பாடு, மொழி, பழக்க வழக்கங்கள் என தன்மைகளை வெளிக்காட்டுகிறது.
தனி மனித பார்வையில், நாட்குறிப்பு வகையில் எழுதப்பட்டுள்ளது. அன்றாட செயல்பாடுகளை விவரிக்கும் பாங்கு, உடன் பயணிக்கும் அனுபவத்தை தருகிறது. பொது இடங்களில் உதவும் பண்பையும், பன்மொழி பேசும் திறன் கொண்ட மக்களின் சாதுரியத்தையும், மனித நேயத்தையும், இயற்கை எழில் மிளிரும் இடங்களையும் விவரித்து பரவசப்படுத்துகிறது.
சிவப்பு நிறத்திலான மார்பிள் மர இலையே கனடா கொடி. பூங்காவில் எதிர்படுபவரின் இயல்பான பேச்சு போன்றவை தனித்துவமாக இருக்கிறது. கனடா நாட்டை சுற்றி வந்த அனுபவத்தை தரும் பயண நுால்.
– ஊஞ்சல் பிரபு