திருமகள் நிலையம், புதிய எண். 11, பழைய எண். 5, சவுந்தர்ராஜன் தெரு, தி.நகர், சென்னை - 17. (பக்கம்: 288.)
சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி என்னும் சிற்றிலக்கிய நூல், பதின்மூன்று பிரிவுகளைக் கொண்டது. கலிங்க நாட்டில் நடைபெற்ற போரினை, பரணி என்னும் இலக்கிய வகையில், பாடியமையால் இது கலிங்கத்துப்பரணி எனப் பெயர் பெற்றது. முதல் குலோத்துங்கச் சோழனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, பாடப்பட்ட இந்த நூல், அனைவரும் எளிதில் கற்கும் வகையில், மொழிப்புரையுடன் அமைந்துள்ளது. 596 கண்ணிகளில் அமைந்த இந்த நூலின் கருத்துக்கள், எல்லாரையும் கவரும் தன்மை வாய்ந்தது.