ஹோம்லாண்ட் பதிப்பகம், 23, திருமலைநகர் இணைப்பு, முதலாவது முக்கிய சாலை, பெருங்குடி, சென்னை-600 096. (பக்கம்: 164).
இந்திய மொழிக் குடும்பங்களைத் தெரிவித்துவிட்டு திராவிட மொழிகள் அனைத்தையும் அறிமுகம் செய்கிறது இந்த நூல். வட, தென், நடுத் திராவிட மொழிகளைப் பற்றிய செய்திகளையும் அவற்றின் சிறப்பியல்புகளையும் விளக்குகிறது.தமிழ்மொழி செம்மொழி என்னும் அரசின் அறிவிப்புக்கு முன்னர் உள்ள படிநிலைகளை நூலாசிரியர் தெரிவித்துள்ளார். இருபத்தொன்றாம் நூற்றாண்டில், தமிழ் ஆய்வுகளின் போக்குகளையும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பணிகளையும் இணைய நூலகப் பணியையும் இந்த நூல் தெளிவுபடுத்துகிறது. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் இந்த நூல் முன் வைக்கிறது. - முகிலை ராசபாண்டியன்