முகப்பு » கல்வி » The Pearson CSAT Manual 2013

The Pearson CSAT Manual 2013

விலைரூ.1299

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: பியர்சன் கல்வி நிறுவனம்

பகுதி: கல்வி

Rating

பிடித்தவை

 பக்கம்: 2,016  

மத்திய அரசின் முடிவிற்கேற்ப, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், தான் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளின் பாடத்திட்டத்தினையும், தேர்வு வினாத்தாள் கட்டமைப்பினையும் மாற்றி உள்ளது. 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு தேர்வுகளில், இந்த மாற்றம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதுவதை இலக்காகக் கொண்டுள்ள இளைஞர்களை, இந்த புதிய மாற்றங்களுக்கு ஏற்ப வழிகாட்டும் முறையில், பியர்சன் கல்வி  நிறுவனம், "பியர்சன் சி ஸாட் 2013    நூலினைத் தயார் செய்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நூலின் தொடக்கத்தில், கடந்த இரண்டு ஆண்டு நடத்தப்பட்ட தேர்வு வினாத்தாள் ஆய்வும், தொடர்ந்து பாடத்திட்டத்தினை முழுமையாகத் தரும் வகையில் தகவல்கள், பல அத்தியாயங்களில், 2,000 க்கும் மேலான பக்கங்களில் தரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவின் இறுதியில் தரப்பட்டுள்ள வினா வங்கி, அவற்றிற்கான விடை, தேர்வுக்கு தயார் செய்பவர்களைச் சரியான இலக்கு நோக்கி செலுத்துகிறது. ஒவ்வொரு பாடப்பிரிவின் முடிவிலும், சோதனை தேர்வு வினாத்தாள் மற்றும் விடைகள் தரப்பட்டுள்ளன.இதில் எதிர்கொள்ள வேண்டிய இரண்டு தாள்களில், அதிகப்படியான மாற்றம் இரண்டாம் தாளில் தான் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரண்டாவது தாளில், முதல் முறையாகச் சேர்க்கப்பட்டுள்ள ஆங்கில மொழி அறிவுத் திறன் சார்ந்த      பாடங்கள் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன.இந்நூலின் புதிய தனிச் சிறப்புகளாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்

* இரண்டு தாள்களுக்குமாக இந்நூல் ஒருங்கிணைந்து தரப்படுகிறது.
* தேர்வுக்கெனப் பயன்படுத்திப் படிக்க வேண்டிய பலவகை வரைபடங்கள், 29 பக்கங்களில் தரப்பட்டுள்ளன.
* இந்நூலைப் பெற்றவர்கள், நூலை வெளியிட்ட பியர்சன் இணைய தளத்தில் பதிந்து, இந்நூலில் இருந்து தேவைப்படும்   கட்டுரைகளை பி.டி.எப்.வடிவில் பெற்றுக் கொள்ளலாம்.
அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் இந்நூலை வழிகாட்டி நூலாகப் பயன்படுத்தலாம். பொது அறிவு மற்றும் சிந்தனைத் திறன் ஆக்கம் செழுமை பெற விரும்புபவர்களும், இந்நூலை வழித்துணையாகக் கொள்ளலாம். மேலும்   விவரங்களுக்கு, 97909 79384 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us