முகப்பு » பொது » செல்லுலாய்ட் செல்வங்கள்

செல்லுலாய்ட் செல்வங்கள்

விலைரூ.240

ஆசிரியர் : குரு.நாகராஜன்

வெளியீடு: ரேணுகா பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
சினிமா கலை நுட்பங்களை பகுத்து, தெளிவான தகவல் தரும் நுால். திரைப்படம் தயாரிப்பது தொடர்பான முழு விபரங்களையும் கொண்டு உள்ளது. மொத்தம் 12 தலைப்புகளில் அமைந்துள்ளது. அவை தமிழ் சினிமாவை மையமாக கொண்டு, அந்த நாள், மெல்லத் திறந்தது கதவு, மூன்று முகம், எங்கள் குடும்பம் பெருசு, கலைக் கோவில், குடும்பம் ஒரு கதம்பம், ஆயிரங்காலத்து பயிர், அன்று முதல் இன்று வரை, உள்ளே வெளியே, நேற்று இன்று நாளை, ரசிக்கும் சீமானே, பிரியா விடை என சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒப்பற்ற அறிவியல் கண்டுபிடிப்பான சினிமா தோற்றம், வளர்ச்சி, செயல்பாடு, நன்மை, தீமைகள் புரியும்படி சொல்லப்பட்டு உள்ளது. சினிமா தொழில் நுட்பம் பற்றியும் விளக்குகிறது. நுட்பமற்ற காட்சிகளை சுட்டிக்காட்டுகிறது. சினிமா தயாரிப்பில் இருக்க வேண்டிய கவனம், தவறால் ஏற்படும் துன்பம் என்பதையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது. சினிமா கலையை எளிமையாக புரிய உதவும் நுால்.
அமுதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us