புதுச்சேரி நாட்டுப்புறத் தெய்வங்கள் பற்றிய ஆய்வு நுால். சமுதாய அமைப்பு, தெய்வ இடப் பகிர்வு, தெய்வ வகைகள், அமைப்பு முறைகள், திருவிழாக்கள், சடங்குகள் பற்றி கூறப்பட்டு உள்ளது.
பெருந்தெய்வங்கள் மேல்ஜாதியிலும், எல்லைத் தெய்வங்கள், குலதெய்வங்கள் இடைநிலை, அடிநிலையராலும் கொண்டாடப்படுவதை பதிவு செய்கிறது. கிராம, குல, ஜாதித் தெய்வம் என வகைப்படுத்தி பட்டியலிட்டுள்ளார். கோவில் அமைப்பு முறையையும் விளக்கும் நுால்.