உபதேசம், அறிவுரை போன்ற வறட்சியான விஷயங்களையும், கற்பனைத் திறமையால் விருப்பமாக மாற்ற முடியும் என நிலைநாட்டியுள்ள நுால்.
முதல் பாகத்தில் பகவத்கீதைக்கு, ‘கண்ணனின் முத்தம்’ என பெயர் வைக்கலாம் என்று கூறியவர் இரண்டாம் பாகத்தில் ‘கண்ணனின் அன்பு’ என்று பெயர் சூட்டலாம் என்கிறார். அந்த அளவு அனுபவித்து எழுதியுள்ளார்.
பகவத்கீதையின் சாரம் காதல். இறைவன் மனித இனத்தின்மேல் வைத்திருக்கும் இணையற்ற காதல். அந்த அன்புதான் ஆத்மா. அந்த அன்புதான் பிரம்மம். அந்த அன்புதான் ஆண்டவன். இவ்வுலகம் முழுதிலும் பரந்து நிற்கும் அன்பு அழிவற்றது என்கிறது.
– இளங்கோவன்