தமிழறிஞர் செல்வகேசவராயரின் ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்து தரும் நுால். தமிழ், இலக்கிய அகராதி, கம்பர், திருவள்ளுவர் பற்றிய படைப்புகளை உடையது.
தமிழ் என்ற தலைப்பில் மேற்கொண்ட சொல்லாய்வு, வடசொற்கள் ஊடுருவல் பற்றி வெளிப்படுத்துகிறது. அகத்தியர், மொழி, திராவிடம் பற்றி ஆழ்ந்த ஆய்வு நோக்கை காண முடிகிறது.
உரைநடை, கவிதை, மொழியியல், நாட்டார் வழக்காற்றியல், ஒப்பாய்வியல், அகராதியியல் எனப் பல தளங்களிலும் ஆய்வுப்பரப்பு பரந்திருந்ததை அறியச் செய்கிறது. பல்வேறு படைப்புகளில் பன்மொழிப் புலமையை அறிய முடிகிறது.
செல்வக்கேசவராயரின் ஆய்வுப் படைப்புகளை அறிய வைக்கும் அரிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு