கோவிலில் எது விசேஷம், என்ன வித்தியாசம், என்ன புதுமை என்பதை கூர்ந்து கவனித்து எழுதப்பட்ட நுால்.
உதாரணமாக, பாபநாசர் கோவில் உலகம்மன் சன்னிதியில் நடக்கும் திருமணத்தில் தாலி கட்டும்போது, அம்பாளே மணமகளுக்கு நாத்தனாராக இருந்து முடிச்சை இட்டு திருமணத்தை நடத்தி வைப்பதாக ஐதீகம்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட, பெரிய பெருமாள் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆதி திருவரங்கத்தில் அருள்பாலிக்கிறார். கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலுக்கு, பிச்சை எடுத்து திருப்பணி செய்துள்ளார் ஒரு பக்தர். சுவையான விஷயங்களைக் கொண்டுள்ள நுால்.
– இளங்கோவன்