முகப்பு » ஆன்மிகம் » சித்தாந்த சிகாமணி

சித்தாந்த சிகாமணி

விலைரூ.600

ஆசிரியர் : நல்லாற்றூர் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள்

வெளியீடு: மயிலம் பொம்மபுர ஆதீனம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வீரசைவம் பற்றி விரிவான விளக்கங்கள் உடைய நுால். பிரதம பரிச்சேதம், த்விதிய பரிச்சேதம், அந்நியக்கதை என்ற பிரிவுகளில் நெறி விளக்கங்களை விரித்துரைக்கிறது.

குரு வணக்கம், இட்டலிங்க வழிபாடு, சங்கமர் வழிபாடு, உருத்திராக்கம், திருநீறு, அடியவர் பெருமை, பிரசாதம், பாதோதகம் என வீரசைவ செந்நெறிகளை விரிவாக விளக்குகிறது. இறையனுபவம் கனிந்த பாடல்களைக் கொண்டுள்ளது. வீரசைவம், சைவ சிந்தாந்த செந்நெறிகளை கலந்த பாமாலையாக விளங்குகிறது.

இதயத்தில் சிவலிங்க உணர்வு வாய்க்கப்பெற்றவன் லிங்கநிசன். லிங்கம் பிரமமாகும் என்பதோடு, அந்த பிரமமே உலகம் தோன்றக் காரணம் என்ற கருத்து, ஆன்மச் சிந்தனைக்கு திறவுகோலாக விளங்குகிறது.

– ராம.குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us